1) மங்கிபொக்ஸ் என்ற குரங்கு அம்மை அல்லது குரங்கு காய்ச்சல் பாலியல் தொடர்புகளால் பரவுகிறதா? என கேள்விகள் எழுந்துள்ளன.
2) எனினும் அது இன்னும் மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கையின் உயிரியல் மூலக்கூற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
3) இந்த நோயினால் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என கூறப்படுகின்ற போதும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
4) இதுதொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில், இந்த நோயானாது தோல், வாய் உள்ளிட்டவற்றாலும், பாலியல் தொடர்பாலும் பரவலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
5) ஆனால் விந்தணு உள்ளிட்ட பாலியல் உறவின் விளைவால்தான் இது ஏற்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




