குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக்கொட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா, லக்சபான தோட்ட – வாழமலை பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைகளின் பின் மூவர் வீடு திரும்பினர். ஒருவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.