கெனியன் நீர்தேகத்தில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவனை மீட்க சுழியோடிகள் வருகை!!

0
121

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தில் தவறி விழுந்து உயிரிழந்த ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவனை மீட்க கொழும்பிலிருந்து சுழியோடிகள் 21.03.2018 அன்று வருகை தரவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்தேக பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு 20.03.2018 அன்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளார்.

தன்னோடு வரவேண்டாம் என கூறியும் அதனை மீறி தற்பொழுது உயிரிழந்த மகனும் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்த நிலையில் நீர் அருவி பகுதியில் மகன் கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது காழிடறி தவறி நீர்தேகத்தில் வீழ்ந்துவிட்டார்.

இவரை காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்தேகத்தில் குதித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலை கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர்.

DSC04084 DSC04085 DSC04090

இருந்தும் நீர்தேகத்தில் வீழ்ந்த மகனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இவரை மீட்பதற்காக கொழும்பிலிருந்து சுழியோடிகள் வரவழைத்திருப்பதாக சம்பவம் தொடர்பில் விசாரணையை தொடர்ந்துள்ள மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் (வயது – 14) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here