ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வதந்தி பரவியது. மேலும், தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டதுபோன்ற ஏஐ வீடியோக்கள், புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாகின.




