கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமைப்பரிசில் கருத்தரங்கு

0
168

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம் தன்னுடைய கல்விச்செயற்பாட்டில் வருடாந்தம் பாடசாலையிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கினை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றது.
இவ்வாண்டு பாடசாலையிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இரு நாள் கருத்தரங்கினை நடாத்தியதுடன் மாணவர்களுக்கு கையேடுகள் சான்றிதழ்களையும் வழங்கி ஊக்குவித்தது.

அத்துடன் அயல்பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கும் கையேடுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர். பாடசாலையின் அதிபர் இரா.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை பழைய மாணவர் சங்க செயலாளர் கிருஸ்ணராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

அதிதிகளாக மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சின் உதவிச்செயலாளர் கணேஸ்ராஜ் நுவரெலியா கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் எஸ்.செல்வராஜ் கோட்டம் இரண்டின் பணிப்பாளர் டி.பி.தனபாலன் ஆசிரிய ஆலோசகர்களான திருமதி பத்மஜோதி திருமதி விமலா வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

20180722_155919

இந்நிகழ்வில் உரையாற்றிய மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சின் உதவிச்செயலாளர் கணேஸ்ராஜ் மாணவர்களின் கல்வியடைவினை மேம்படுத்த கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம் இத்தகைய நிகழ்வினை ஏற்பாடு செய்வது பாராட்டத்தக்கது.

தொடர்ந்து க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கும் உயர்தர மாணவர்களுக்கும் இத்தகைய முன்னோடி கருத்தரங்குகளை நடாத்துவது மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதாக அமையும். மாணவர்கள் மன அமைதியை கடைப்பிடிப்பதன் மூலம் கற்றல் நடவடிக்கையில் சிறந்த முறையில் அமையும். அதற்குரிய தியான பயிற்சிகளை
மேற்கொள்ளவேண்டும் என்றார்.

 

கொட்டகலை நிருபர் தி.தவராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here