கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தி; வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் அங்கமான மரதன் ஓட்டப்போட்டி பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் நுவரெலியா வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ஜி. அமரசிறி பியதாச அவர்களின் வழிகாட்டலில் எதிர்வரும் 24.01.2019 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் இரா.சிவலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா பிரதேச செயலாளர் று.ஆ. ஆனந்த அவர்களும் கௌரவ அதிதிகளாக நுவரெலியா கல்வி வலய மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மோகன்ராஜ் நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் இரண்டின் கல்விப்பணிப்பாளர் டி.பி.தனபாலன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி பத்தனை சந்தியிலிருந்து ஆரம்பமாகி கொட்டகலை நகரினூடாக கொமர்சல் சந்தியை சென்றடைந்து மீண்டும் பாடசாலையை வந்தடையும். பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி பத்தனை சந்தியிலிருந்து ஆரம்பமாகி பாடசாலையை வந்தடையும்.
இந்நிகழ்வில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான பரிசில்களை பழைய மாணவர் சங்கம் வழங்கவுள்ளது.
புழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொண்டு நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ்.கிருஸ்ணராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோட்டன்பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா