கொட்டகலை பிரதேச சபையின தவிசாளர் ராஜமணி பிரசாத் மற்றும் பிரதி தவிசாளர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் ஆகியோர் தங்களது கடமைகளை 05.04.2018 அன்று காலை 8.30 மணியளவில் சுபநேரத்தில் சர்வமத வழிபாடுகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்றனர்.இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் இ.தொ.கா உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)