திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்ட தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ரொசிட்ட தோட்ட 7ஆம் இலக்க தேயிலை மலையில் (20.09.2017) மாலை தேயிலை செடிகளுக்கு உரம் போட்டுக்கொண்டிருந்த 25 வயதுடைய எஸ்.கலைக்குமார் என்பரே சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்காகியவரை கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்