நுவரெலியா வலயத்தின் தலவாக்கலை கோட்டத்தில். அமைந்துள்ள கொட்டக்கலை பிரதேச ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் “”சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி””
நிகழ்வுகள் இன்றைய தினம் ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பக்கல்வி பணிப்பாளர் செல்வராஜா அவர்களின் ஆலோசனைக்கமைய ஆ.விளையாட்டு இணைப்பாளர் ஸ்டீபனின் தலைமையில் ஆசிரியர்கள் மோகனதாஷ், ஏற்பாட்டுக்குழு தலைவர் சிவக்குமார் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதிலே பின்வரும் பாடசாலைகள் கலப்பு பிரிவில் வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது.
#ஸ்டேலின் த.வி
#போகாவத்தை த.வி
#திம்புள்ள த.வி
#ஹரிண்டன் த.வி
#டிரேட்டன் த.வி
#கெலிவத்தை த.வி
#வெலிங்டன் த.வி
ஆண், பெண் தனி போட்டிகளில்
#கொட்டக்கலை த.ம.வி
#ஸ்டோனிப்கிளிப் த.ம.வி
#பத்தனை த.வி
#கிரிஸ்டஸ்பார்ம் த.வி
#டெரிக்கிளயார் .த.வி
#மவுண்ட்வரான் த.வி
#யதன்சைட் த.ம.வி
போன்ற பாடசாலைகள் வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.