பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் 05தொழிலாளர்கள் குளவிகொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில்அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 14.03.2018.புதன் கிழமை காலை 09.45.மணி அளவில் இடம் பெற்றதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதில் நான்கு பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார் .
காயங்களுக்கு உள்ளான 05தொழிலாளர்களுள் ஒரு பெண் தொழிலாளர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதோடு ஏனைய மூன்று பெண்தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேயிலை மரத்திற்கு அடி பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்ப்பட்ட தொழிலாளர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)