இது இலங்கையில் இதுவரையில் ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கையாக் கருத்தப்படுகிறது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 923 ஆக உயர்வடைந்துள்ளது.
அவர்களில் 11 ஆண்களும் , 18 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில், அவிசாவளை, நுவரெலியா, ஹொரனை, திருகோணமலை, நெலும்தெனிய, நவுன்குடுவ, பாணந்துறை, அம்பலாங்கொடை, ரத்கமை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன், நாகொடை, மொரட்டுவை, வக்வெல்ல, கட்டுகஸ்தோட்டை, ஹிக்கடுவை, கிங்தொட்ட, கொழும்பு – 5, வெலிகம்பெல, கல்லேன்பிந்துனு, பொல்கஸ்ஸம்பிட்டி, ஜா-எல, பொரளஸ்கமுவ, கந்தானை, பேராதனை, பருத்தித்துறை, பொரலந்தை, வத்தளை, களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதேநேரம், மத்துகம பகுதியை சேர்ந்த 2 பேரும் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.