நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று (24) திகதியும் பல பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதற்கமைவாக அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்டு மஹாவெலி ஜனபத வித்தியாலயத்தில் ருவன்புர கிராம சேகவர் பிரிவில் 390 பேருக்கு சைனோபாம் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் கினிகத்தேனை பகுதியில் 7 கிராம சேவகர் பகுதியை சேர்ந்த 616 பேருக்கு கினிகத்தேனை ஆரம்ப பாடசாலையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்து ஒக்டோபர் மாதத்திலிருந்து 23 ம் திகதி வரையான காலப்பகுதியில் 13 பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளிலிருந்து இது வரை சுமார். 6285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் மாத்திரம் (23) பொகவந்தலா,திம்புல்ல பத்தனை,நுவரெலியா உட்புஸ்ஸல்லாவ,நோர்வூட் வட்டவலை,உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமார் 148 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்