கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பத்தனை திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த குமார் டிக்ஷன் (வயது 21) என்பவரின் சடலம் 27.11.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் திம்புள்ள தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.கொழும்பில் பழக்கடை ஒன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் மாறியதையடுத்து, இவர் கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும், இவ்வாறானதொரு சம்பவம் இனிமேல் மலையக இளைஞர்களுக்கு ஏற்படக்கூடாது என திம்புள்ள கீழ்பிரிவு தோட்ட மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த இளைஞன் தனது வீட்டின் மூன்றாவது பிள்ளை எனவும், இவரின் தந்தை சமீபத்தில் காலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் 28.11.2018 அன்று மதியம் திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெறவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்னர்.
க.கிஷாந்தன்