கொழும்பில் பணிக்காக சென்ற இளைஞர்களுக்கு ராதாகிருஸ்ணன் ஊடாக உதவிக்கரம்

0
164
மஸ்கெலியா சாமிமலை பகுதியிலிருந்து வெலிசறைக்கு  கட்டட வேலைக்கு சென்ற இளைஞர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் ஊடாக உதவிகரம் நீீட்டப்பட்டுள்ளது.
அதாவது மஸ்கெலியாவிலிந்து வெலிசறை பகுதிக்கு கட்டட வேலைக்காக சென்ற இளைஞர்கள்  கொரோனா பயணத்தடை காரணமாக வெளியில் செல்ல முடியாது பாரிய சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.கடந்த மாதம் 25 திகதிகயிலிருந்து அத்தியாவசிய உணவு பொருட்களை கூட பெறமுடியாத நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞர்கள் வே.ராதாகிருஸ்ணனுக்கு தொடர்பு கொண்டு விடயத்தை கூறியதற்கு அமைய உடனடியாக மாபோல பொலிசாருடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கான அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொடுக்க வே.ராதாகிருஸ்ணன் இன்று  நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here