கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு.
பஸ்யால முருதவெல வளைவு பிரதேசத்தில் இன்று காலை தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மாவனெல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றும் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேரூந்தொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவரும் மற்றும் மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 32 வயது இளைஞரொருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வதுபிடிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விபத்து காரணமாக அருகில் உள்ள விற்பனை நிலையமொன்றும் சேதமடைந்துள்ள நிலையில் , நிட்டம்புவ காவற்துறையினர் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.