கொழும்பு மெனிங் சந்தை இன்று முதல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

0
169

மெனிங் சந்தை இன்று (03) அதிகாலை முதல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

மெனிங் பொது சந்தை மற்றும் அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய சங்க பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

500 ரூபாவிற்கு தயாரிக்கப்பட்ட 12 மரக்கறிகளுடனான நிவாரண பொதியினை கொழும்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட பொதுமக்கள் நிதி வழங்கல் மற்றும் மருந்து விநியோகத்திற்காக இன்று (03) முதல் அஞ்சலகங்கள் மற்றும் உப அஞ்சல் காரியாலயங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவு அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டைகளை காண்பித்து அஞ்சலகங்களுக்கு பிரவேசிக்க முடியும் என அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here