கொவிட் தொற்று இன்னமும் தொடர்கிறது; உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

0
136

உலகெங்கும் இந்த வகை கொவிட்-19 கிருமித் திரிபின் பரவல், தற்போது மெதுவாக அதிகரித்து வருகிறது. கொவிட்-19 பரவல் இன்னும் தொடர்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் மீணடும் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிருமிப் பரவல் தொடர்பான தயார்நிலை, தடுப்பு நடவடிக்கைப் பிரிவின் இடைக்கால இயக்குநர் மரியா வான் கெர்கோவ், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உலகச் சுகாதார ஸ்தாபனத்தின் சமகால கலந்துரையாடல் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

‘‘கொவிட்-19 தொற்று மாற்றமடைந்து பரவுவது தொடர்வதால் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.

அண்மைக் காலமாக கொவிட்-19 கிருமியின் ‘எக்ஸ்பிபி.1.5’,‘எக்ஸ்எக்ஸ்பி.1.16, ‘இஜி.5’ ஆகிய மூன்று திரிபுகள் கண்காணிக்கப்பட்டன.

‘பிஏ.2.86’உள்ளிட்ட மேலும் ஆறு திரிபுகளும் கண்காணிக்கப்படுகிறது.

தற்போது ‘பிஏ.2.86’ திரிபு கண்காணிக்கப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகெங்கும் இந்த வகை கொவிட்-19 கிருமித் திரிபின் பரவல், தற்போது மெதுவாக அதிகரித்து வருகிறது.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here