கொஸ்லாந்தை பெரகள பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த காரொன்று திடீரென தீப்பற்றிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது, நேற்று மாலை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த கார் அருகில் உள்ள வாய்க்கால் மதில் ஒன்றில் மோதியபோது தீப்பற்றிக் கொண்டதாக தெரிய வருகிறது.
மேற்படி காரில் பயணித்தவர்கள் வெளியில் பாய்ந்து தப்பினர் என போலீசார் தெரிவித்தனர், கார் முற்றாக எரிந்து விட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.