இன்று (08) காலை 4.40 மணியளவில் கொஹுவெல, சுநேத்ர தேவி பாதைகக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொஹுவெலயில் இருந்து பெபிலியான நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நோருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் உட்பட மூவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று (08) நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொஹுவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.