“கோப்” நாடாளுமன்ற விசாரணைக்குழு பின்பற்றும் நடைமுறைகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மத்திய வங்கி தொடர்பிலேயே குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிக்கை ஒன்றை கையளித்துள்ளனர்.
இதன்படி மத்திய வங்கியிடம் இருந்து இரகசிய தகவல்களை பெறும்போது, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை இந்த குழு பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான அறிக்கை ஒன்று, பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கோப் குழுவுக்கு மத்திய வங்கி தகவல் வழங்க மறுத்ததாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.