கோலாகலமாக நடந்துமுடிந்த அமலா பால் 2வது திருமணம்!

0
223

கடந்த மாதம் 26ம் திகதி அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், அமலா பாலிடம் தனது காதலை தெரிவித்தார். தனது நண்பரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மலையாளத்தில் ‘நீலத்தாமரா’ என்ற திரைப்படம் மூலம் அமலா பால் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் மைனா திரைப்படம் மூலம் பிரபலமானார். தனது கண்களால் ரசிகர்களை கிறங்கடித்த அமலா பால், கோலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை, சூர்யாவுடன் பசங்க 2 என அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார். பின்னர் ஆடை படத்தில் நிர்வாணமாகவும் நடித்து அதிரடி காட்டினார்.

இதனிடையே இயக்குநர் எ.ஏல் விஜய்யை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அமலா பால், 2017ல் அவரை விவாகரத்து செய்தார். கடந்த மாதம் 26ம் திகதி தனது 32வது பிறந்தநாளை அமலா பால் கொண்டாடினார் . அப்போது அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், அமலா பாலிடம் தனது காதலை தெரிவித்தார்.

இதனை எதிர்பார்க்காத அமலா பால், நண்பரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் ஷேர் செய்துள்ளனர். “இரண்டு ஆன்மாக்கள், ஒரே பயணம்..” என அமலா பாலுடன் திருமணமானதை ஜகத் தேசாய் அறிவித்துள்ளார் . இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அமலா பாலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Amala paul wedding picsAmala paul wedding pics

Amala paul wedding pics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here