நுவரெலியா அக்கரப்பத்தனை ஹோல்புறூக் ரிப்பப்ளிகன் சர்வதேச பாடசாலையில் 2021 ஆண்டு கா.பொ.தா பரீட்சையில் முதல் தடவையாக தோற்றிய 10 மாணவர்கள் நூறு விகிதம் பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு சமூகத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் கலாநிதி திருமதி ஆர்.கே.ஜெயசத்தியவாணி தலைமையில் லட்சுமி மஹால் கேட்போர் கூடத்தில் இன்று 07 திகதி காலை 11 மணிக்கு நடை பெற்றது.
குறித்த நிகழ்வில் பாடசாலைக்கு நூறு சதவீத பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிக்கும் பட்டதுடன் அதனை பெற்று உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலைக்கு முன்பாக பிரதம அதிதிகள் பேண்ட் வாத்திய இசையுடன் பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாணவர்களால் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள துணைபுரிந்த பெற்றோர்களும் இதன் போது பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வுக்கு ரிப்பப்ளிகன் சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் விஜயகுமார் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வைத்திய அதிகாரி கிராம சேவகர் பாடசாலை அதிபர்கள் பிரதேசவாசிகள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்.