ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ போட்டியிலிருந்து விலகியமை தொடர்பில் பலர் பல கருத்துக்களை கூறினாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் மக்களின் எண்ணங்களையும் நாட்டின் சூழ்நிலையை கருத்திற் கொண்டே விலகியுள்ளதாகவும் அவர் ஜனாதிபதி தெரிவு போட்டியில் இருந்து விலகினாலும் சஜித் பிரதமராவது உறுதியென பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 20வது திருத்தத்தை இல்லாமல் ஆக்கப்பட்டு 19ம் திருத்தமே நடைமுறைப்படுத்தப்படுத்தபட உள்ளது.அச்சந்தர்ப்பத்தில் பிரமருக்கே அதிக அதிகாரமும் சக்தியும் கிடைக்கும் எனவே தற்போது நாட்டிற்கு தேவை அதிகாரமிக்க தலைவரும் பலமிக்க ஆட்சியுமே அந்த வகையில் பலமிக்க தலைவரும் பலமிக்க ஆட்சியும் கிடைக்குமிடத்து நாடு பழைய நிலையும் செழிப்பான நாடாகவும் மாறும் எனவே சஜித் பிரமராக்க அனைவரும் தீர்மானித்துள்ளோம் சஜித் பிரேம தாஸ தான் பிரதமராக வருவார்.
அதுமட்டுமல்லாது கட்சி தீர்மானத்திற்கு அமையவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர் என்ற ரீதியிலும் கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு தானும் டலஸ்க்கே தனது ஆதரவை வழங்குவதாகவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்