சட்டவிரோதமாக மாணிக்ககல் தோன்ற சென்றவர் பன்றிக்கு அடித்த மின்கம்பியில் சிக்கி பலி-பொகவந்தலாவயில் சம்பவம்.

0
197

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கீழ்ப்பிரிவை சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக மாணிக்கல் அகல்வதற்கு சென்ற வேலையில் எதிர்பாராத விதமாக பன்றிக்கு அடித்து வைத்திருந்த மின்கம்பியில் தாக்கி சம்பவமிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய செல்லப்பன் சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற வகையையில் பன்றிக்கு மின்கம்பியை அடித்த குற்றத்திற்காக இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்தோடு இறந்த நபரோடு மாணிக்கல் அகல்வுக்கு சென்ற மேலும் இருவர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிசார் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here