சதி என்று சொல்லி கடந்து செல்ல முடியுமா – பிரதமரிடம் பகீர் கேள்வி!

0
65

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கும் சில குழுக்கள் மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமைகள் உள்ளிட்ட விடயங்களுக்காக முன்னிலையாகியிருப்பதோடு இது குறித்த சில கருத்துகளையும் வௌியிட்டுள்ளனர். இவ்வாறிருக்க இதனை சதி முயற்சி என்று மட்டு சொல்லி மட்டுப்படுத்திவிட முடியுமான என ஊடகவிலயாளர் ஒருவர் பிரதமர் ஹரினி அரசூரியவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர், புதிய கல்வித் திட்டத்தில் தவறான இணைய பக்கத்தின் பெயர் உள்ளடக்கம் செய்யப்பட்டத்து சதி முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.  அதன் அடிப்படையிலான சீஜடி விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் கேட்கும் கேள்விக்கும் கல்வி மறுசீரமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதேபோல் “நான் எந்த நேரத்திலும் கல்விக்குள் பிள்ளைகளுக்கு மாற்றுப்பாலினம் குறித்து கற்பிக்க வேண்டும்” என்ற நிலைப்பாட்டில் இருந்ததில்லை. என்றும் பிரதமர் கூறினார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் உள்ளக விசாரணை அறிக்கை கிடைத்துள்ளது அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here