bநிறைய பண வரவு கிடைக்கும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன.
மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன.
இந்த மாதம் முதல் சனியின் பார்வையில் இருந்து ராகு விலகுவதால் மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. கேது பகவான் உங்க எதிரிகளை வெல்ல வைப்பார்.
லாப சனியால் அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது நல்லது.
பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். ஆன்மீக யாத்திரைகள் புதிய அனுபவங்களை கொடுக்கும்.
ரிஷபம்
நிறைய பண வரவு கிடைக்கும். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள்.
மனதில் நல்ல சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் கிடைக்கும். அள்ளித்தரப்போகிறார் ராகு பகவான்.
மிதுனம்
நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள்.
லாப வீட்டில் குரு இருப்பதால் நிறைய பிரச்சினைகள் தீரும். புதிய தொழில் முயற்சிகள் கை கொடுக்கும்.
கடகம்
ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கைத் தரம் உயரும். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர்.
குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் மாயமாவார்கள்.
சிம்மம்
கண்டச்சனி பாதிப்பாக இருக்கும் இந்த நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வது உடல்நிலையில் சில கவலைகளை ஏற்படுத்தும்.
பிரச்சினைகளை வெளியில் சொல்ல வேண்டாம். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.
வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.
கன்னி
ராகு பகவான் ஏழாம் வீட்டிலும் கேது பகவான் ஜென்ம ராசியிலும் அமர்வதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
வருவாய் அதிகரித்தாலும் செலவுக்கு குறையிருக்காது.
உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் கேது பகவான் அமர்வதால் விரக்தியான மனநிலையைத் தருவார் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள்.