சனி பிரதோஷத்தையொட்டி கோவிலுக்கு சென்ற ரஜினி! அலையென திரண்ட ரசிகர்கள்

0
127

இன்றுடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இந்த பகுதியில் நிறைவடைகிறது.
சனி பிரதோஷத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.

அம்மன் கோபுரம் முன்பு இறங்கியதும் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி வணங்கிய காணொளிகள் இணையத்தில் வைலராகியுள்ளது.மேலும், நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தகவல் திருவண்ணாமலை நகர பகுதியில் பரவியது.இதனால் கோவிலுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டம் அதிகரித்ததால் உடனடியாக அங்கிருந்து ரஜினி வெளியேறினார். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

இதேவேளை, இன்றுடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இந்த பகுதியில் நிறைவடைகிறது. அவர் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டு செல்வார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here