சமூக ஊடகச் செயற்பாட்டாளர் திசர அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு, முகத்துவார பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பளையைச் சேர்ந்த அவர், தண்டனைச் சட்டக் கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமைக்காகவே திசர அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக ஊடகச் செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டார, சட்டத்தரணிகளின் உதவியைப் பெறுவதற்கு இடமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்நிலையில், கொழும்பு 6ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.