புத்தசாசன அமைப்பின், சமூக சேவைக்கான லங்கா புத்ர, தேசபந்து விருது, ஹட்டன் ரொஷானுக்கு வழங்கப்பட்டது. தபகொல்லகே பதுமசிறி தேரர் அவர்களால், இவ்விருது வழங்கப்பட்டது. ஹட்டன் எரோல் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவருமாவார்.
இவர், ஹட்டன் இளைஞர் கழக தலைவராக, அம்பகமுவ பிரதேச, நிலையான அபிவிருத்திக்கான இளைஞர் படையணின் ஒருங்கிணைப்பாளராக, பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஊடக செயலாளராக, Afriel அமைப்பின் தகவலறியும் சட்டம் பற்றிய இணைப்பாளராக, ஹட்டன் சர்வோதய அமைப்பின் இளைஞர் அமைப்பாளராக, சேவையாற்றியுள்ளார். தற்போது ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனரான இவர், A.C.T அமைப்பின் இணைப்பாளராகவும், மலையக தொழிலாளர் வர்க்கத்தின் உப பொருளாளராகவும் இருந்து மலையக கல்வி அபிவிருத்திக்கு பங்காற்றி வருகின்றார்.