சமூக சேவையாளர் ஜெ.ஜெய்சங்கரின் சமூக சேவை பாராட்டுக்குறியது.

0
236

சமூக சேவையாளரும் பிரபல இளம் வர்த்தகருமான கோட்லோஜ் தோட்ட ஜெ.ஜெயசங்கர் (கன்வெர்ட் ராஜி) அவர்களின் மூன்றாம் ஆண்டு சமூக சேவைப்பணியின் உதவும் கரம் நிகழ்வு இன்று (31) பகல் கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

சமூக சேவைக்கு தனி ஒரு மனிதனாக செயற்படுவதற்கு முன்னுதாரணமாக செயற்பட்டுவரும் ஜெ.ஜெயசங்கர் இன்றைய தினம்,வருமையை எதிர்நோக்கும் குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு ஆடைகள்,மற்றும் பெறுமதி மிக்க உலர் உணவு பொருட்களை தனது சொந்த நிதியில் வழங்கிவைத்தார்.

அத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கோட்லோஜ் தோட்ட முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்கள் பலருக்கு பகல் உணவு வழங்கி வைத்ததுடன் அவர்களை கௌரவித்து ஆசியும் பெற்றுக்கொண்டார்.

அதேநேரத்தில் பிரபல இளம் வர்த்தகரான ஜெ.ஜெய்சங்கர் தனது உழைப்பின் ஒரு பகுதியை சமூக சேவைக்காக ஒதுக்கி அதனூடாக ஒவ்வொறு மாதமும் வறுமையை எதிர்கொள்ளும் பொது மக்களை இனங்கண்டு உதவிகரம் நீட்டி வருகின்றமை சொல்லத்தக்க ஒன்றாகும்.

அந்த வகையில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இவர் முன்னெடுத்து வந்த சமூக பணியின் மூன்றாவது ஆண்டு பூர்த்தி இன்றைய தினம் கோட்லோஜ் தோட்டத்தில் அவர் தலைதூககி நடத்தினார்.

இந்த நிகழ்வில் தோட்ட பொதுமக்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here