சமையல் எரிவாயு பிரச்சினைக்கு அமைச்சர் தெரிவித்துள்ள தீர்வு

0
157

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அடுப்பு வகைகளை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதோ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்வதில் கடுமையான நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

விறகு பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் நகர மக்கள் மற்றும் அடுக்கு மாடி வீடுகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய அடுப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிரட்டைக் கரியை பயன்படுத்தக் கூடிய சில புதிய அடுப்பு மாதிரிகள் பரீட்சார்த்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தரமான ஓர் அடுப்பினை தெரிவு செய்து வணிக ரீதியில் உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் இந்த புதிய அடுப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்கான சிரட்டைக் கரி உற்பத்தியும் மேற்கொள்ளப்படவுள்ளது, என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here