சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்து; இந்த ஜூஸ் குடித்தால் தீர்வு

0
154

ஏழு நாட்களில் சர்க்கரை நோயால் வரக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். தொடர்ந்து 15 நாட்கள் குடித்தாலே போதுமானதாக இருக்கும்
சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்து; இந்த ஜூஸ் குடித்தால் தீர்வு
காய்கறிகளில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும் மருத்துவப் பயன்களும் கொண்ட காய்கறிதான் நூக்கல் (Kohlrabi) ஆகும். ஆனால் நாம் மற்ற நீர்க்காய்கள் அளவுக்கு இதை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

நூக்கலானது வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மைக் கொண்டது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குடல் நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதியாகும்.

நூக்கலானது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி ஏற்படாது. நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்வதோடு, நூக்கலின் கீரையில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

நூக்கல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நூக்கலானது நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும். நூக்கல் வயிற்று பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்புண்களுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போராட கூடியது.

நூக்கலானது மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

நூக்கலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் சக்தியையும் அதிகரிக்கிறது. நூக்கலில் ஒருவித வாசனை வருவதால்தான் இதை சிலர் தவிர்த்துவிடுவார்கள்.ஆனால், வேர்வையால் உடலில் உண்டாகும் உடல் துர்நாற்றம் தவிர்ப்பதற்கு பேருதவி புரிவது நூக்கல் ஜூஸ்தான்.

பாதங்களில் வெடிப்பு வந்தால், இதன் சாறை பூசுவதால் வெடிப்பு மறையும். வயதாகும்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த நூக்கல் தீர்வாகிறது. குறிப்பாக வயதாகும்போது, எலும்புகளும் பாதிப்படைகின்றன. இதனால் வாதம், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதற்கு நூக்கலை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் பலன் கிடைக்கும்.

அதேபோல வயதாகும் போது ஏற்படும் கண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் ஏற்படாமல் இந்த காய் பாதுகாக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் இந்த காயை அடிக்கடி சாப்பிடலாம். நூக்கல் சாறு 45 மில்லிகிராம் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறகின்றன.

15 நாட்களில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கக்கூடிய நூக்கல் ஜூஸ்
நூக்கலை எடுத்து நன்றாக கழுவி நுனிகளை வெட்டி விட்டு தோலை மட்டும் சீவி எடுக்கவேண்டும். தோல் சீவி வைத்திருக்கும் நூக்கலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நூக்கலை வெட்டி எடுத்தது போல் தோல் சீவி வைத்திருக்கும் பீர்க்கங்காயையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் நூக்கலை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து ஒரு துணியில் கட்டி சாறு பிழிந்து தனியாக வைக்கவேண்டும். அடுத்து நாம் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பீர்க்கங்காயை தண்ணீர் விடாமல் அரைத்து துவையல் போல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பீர்க்கங்காய் துவையலில் நூக்கல் சாறை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவேண்டும். நன்றாக கலந்து வைத்திருக்கும் நூக்கல், பீர்க்கங்காய் கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ் நீருடன் கலந்து குடிக்க வேண்டும். ஏழு நாட்களில் சர்க்கரை நோயால் வரக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக குறையும். தொடர்ந்து 15 நாட்கள் குடித்தாலே போதுமானதாக இருக்கும்.

அதன்பிறகு வாரத்துக்கு இரண்டு முறை குடித்து விட்டு நிறுத்தி விடலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட வாரத்துக்கு ஒரு நாள் இந்த ஜூஸை குடித்து வரலாம்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயால் இன்சுலின் போட்டு கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த ஜூஸ் உபயோகமாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here