சர்வதேச கால்பந்து போட்டியில் அதிவேகமாக 50 கோல்: சாதனை படைத்த நார்வே வீரர்

0
6

48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். இதுவரை 17 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தகுதி சுற்று போட்டிகள் தற்போது கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய மண்டலத்துக்கான தகுதி சுற்றில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த ‘ஐ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் நார்வே அணி, இஸ்ரேலை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் களம் புகுந்த நார்வே 5-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை ஊதித்தள்ளியது.

நார்வே அணியில் எர்லிங் ஹாலண்ட் (27-வது, 63-வது மற்றும் 72-வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். இதையும் சேர்த்து அவரது கோல் எண்ணிக்கை 51-ஆக (46 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிவேகமாக 50 கோல் அடித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஹாரி கேனிடம் (71 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.

‘எப்’ பிரிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் ரூபன் நெவ்ஸ் கடைசி நிமிடத்தில் பந்தை தலையால் முட்டி கோல் அடித்து வெற்றியை தேடித்தந்தார். முன்னதாக 75-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தவறவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here