சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பாரத் அருள்சாமி.

0
144

ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 109வது சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் (சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இலங்கை பிரதிநிதியாக  காங்கிரஸின் உப செயலாளரும் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி பங்கேற்கின்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் இவர் பரிந்துரைக்கபட்டுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இணைய வழியாக நடைபெறும் இம் மகாநாட்டில் இளம் தொழிலாளர் பிரதிநிதியாக பாரத் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்ட  தொடர்  நடைபெறாவிடினும் இவ்வாண்டு இணையவழியினுடாக 187 நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளதாகவும் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இதற்கான குழுநிலை கூட்டம் ஆரம்பித்துள்ளதாகவும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் மாநாட்டிற்கு  அரசு பிரதிநிதிகள், முதலாளி பிரதிநிதி மற்றும் தொழிலாளர் பிரதிநிதி ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் என பாரத் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இம்மகாநாட்டில் கொவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில் துறைகள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது எனவும் இதில் கொவிட் 19 தாக்கம் காரணமாக இலங்கையின் தொழித்துறை முகம் கொடுத்த சவால்கள் தொடர்பாகவும் விசேடமாக பெருத்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாளாந்த தொழில் புரியும் தொழிலாளர்கள் தொடர்பாக பாரத்  உரை நிகழ்த்தவுள்ளார். மேலும்  இக் கூட்டத்தொடரின் இறுதியில் வெளிவர இருக்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆவணத்தில் கொவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களளின் தொழில் உறுதி, அனைத்து தொழிலார்களுக்கான தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு, தொழில் புரியும் ஸ்தானத்தில் சுகாதார பாதுகாப்பு, தொழிலார்களுக்கான தகவல் தொழில்நுட்ப கல்வி  மற்றும் பெண் தொழிலார்களுக்கான பாதுகாப்பும் முன்னுரிமையும் போன்ற விடயங்களை வலியுறுத்த உள்ளதாகவும் பாரத் அருள்சாமி  மேலும் தெரிவித்தார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here