சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் மறியல்!

0
10

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு போராட்டங்கள் இடம்பெற்ற போது சேதமடைந்த செவனகலையில் உள்ள மகாவலி அதிகாரசபையின் காணியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்துக்கு இழப்பீடு பெற அவர் முயன்ற நிலையில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து , இழப்பீடு பெற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க தமது பதவியைப் பயன்படுத்தியமை மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here