சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது

0
123

பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை(18) இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் வழி மறித்து , சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தது.

சம்பவத்தில் காயமடைந்த சாரதி , சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் காவல்துறையினர் , தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மானிப்பாய், கல்வியங்காடு மற்றும் மணியந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை நேற்று முன் தினம் (19) கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here