சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் பாடகி சுஜீவா

0
85

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே.சுஜீவா (K. Sujeeva) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டாம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கிளப் வசந்த (club wasantha) என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா (Surendra Vasantha Perera) உட்பட நயன வசுல விஜேசூரிய (Nayana Vasula Wijesuriya) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே.சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கே.சுஜீவா பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு கட்டண வார்டில் சிகிச்சை பெற்று தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here