நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குகிறோம். என சமுர்த்தி, உள்நாட்டுப் பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொழுது கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதற்காக “வணிக சேவை அனுப்புனர்” சேவை மையத்தை நேற்று (28)திங்கட்கிழமை மாலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் திறந்து வைத்த பின் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பொழுது மேற்கண்டவாறு கூறினார்.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உரையாற்றுகையில், சிறிய மற்றும் நடுத்ரதொழில் முனைவோர்களின் மகத்தான பொருளாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை எவ்வித மதிப்பீடும் மேற்கொள்ளப் படவில்லை.
இந்த “பிசினஸ் சர்வீஸ் சென்டர்” நாடளாவிய ரீதியிலான சேவை மையங்கள் தொழில்முனைவோருக்கு சேவைகளை விரைவுபடுத்துவதற்கான செழுமை நோக்கு கொள்கை அறிக்கைகளுக்கு இணங்க உள்ளன, வணிகச் சேவைகளை வழங்குவதற்கு தற்போதுள்ள கார்ப்பரேட் அமைப்பின் சிக்கலான தன்மையின் காரணமாக, வெவ்வேறு நிறுவனங்களால் செய்யப்படும் அதே பணி மற்றும் அவ்வாறு செய்ய எடுக்கும் கால அளவு நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் இருந்து அனைத்து சேவைகளையும் வழங்கும் வணிக சேவை மையம், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும்.
டி சந்ரு