சிறுமியை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 11 ம் திகதி லுணுகலை உடகிருவ காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் 14 வயதுடைய லுணுகலை 27ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த சிறுமி விஷேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார்.எனினும் இதுவரையிலும் மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.
கடந்த சில தினங்களாக சிறுமியை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு இருவரையும் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய பின்னர் இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்களில் ஒருவரான 58 வயதுடைய நபர் குறித்த சிறுமியின் தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்பவர் என தெரிய வந்துள்ளது.
பதுளை நிருபர்-