சிறுவன் துஷ்பிரயோகம் – பிக்கு விளக்கமறியலில்…

0
137

வட்டவளை டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தில் உள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த இன்று (23.02.2022) உத்தரவிட்டார்.

குறித்த விகாரையில் இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றதாகவும், 21ம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 21ம் திகதி மாலை வட்டவளை பொலிஸாரால் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து, 22ம் திகதி மேற்படி சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், பிக்குவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறித்த தோட்டத்தில் பொது மக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 23.02.2022 அன்றைய தினம் பொலிஸாரால் பிக்கு அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி குறித்த பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here