சிறுவர்கள் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கு தடை – பெற்றோரிடம் கருத்துக்கேட்கும் இங்கிலாந்து!

0
2

வருகிற அக்டோபர் மாதம் முதல், நாட்டில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்திருந்தது. சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கான சட்டங்களைக் கொண்டு வர வேண்டுமா? என்று பெற்றோரிடம் இங்கிலாந்து அரசு ஆலோசித்து வந்தது.

இதற்கான அதிகாரப்பூர்வ கருத்துக்கேட்பு தற்போது நடைபெறுகிறது. முழுமையான தடை, இரவு கட்டுப்பாடு மற்றும் அடிமையாக்கும் அம்சங்களை நீக்குவது போன்றவை பரிசீலனையில் உள்ளன. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதற்கான சட்டத்தை அமல்படுத்தியது. இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், கிரீஸ், போலந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இதற்கான மசோதாவை கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here