சிறுவர்கள் மத்தியில் ஒருவகை வைரஸ்_ பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0
131

உக்குவளை, மாத்தளை பிரதேசங்களில் சிறுவர்கள் மத்தியில் ஒருவகை வைரஸ் காய்ச்சலும் அவர்களுள் சிலருக்கு வாயைச் சுற்றி தேமல் போன்ற அடையாளங்கள் ஏற்பட்டு வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் காய்ச்சல் சுமார் ஐந்து முதல் ஏழு நாட்கள் நீடிப்பதாகவும் காய்ச்சலுடன் சிறிது இருமலும் தொண்டை வரட்சியும் காணப்படும் எனத் தெரிவிக்கும் அவர்கள், இது பெரியவர்களிடத்திலும் பரவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழையே இதற்கு காரணமெனவும் இத்தொற்றுக்கு ஆளாகும் சிறார்களை, பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அனுப்புவதையும் கூட்டிச் செல்வதையும், தவிர்த்துக்கொள்ளுமாறும், அவ்வாறானவர்களை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here