சிறைக்குச் சென்ற மனோ கணேசன்! அதிகாரிகள் இடையூறு : வீடியோ

0
205

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அநுராதபுரம் சிறைக்குள் செல்ல அனுமதி மறுப்பு : நுழைவாயிலில் வாக்குவாதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்தவாரம் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து ஆராய்வதற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அங்குள்ள அதிகாரிகளினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோருக்கே இவ்வாறு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த தருணத்தில் முறையிட்டார். எனினும், உடனடியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

நீண்ட நேர காத்திருப்பு, வாக்குவாதங்களின் பின்னர் உள்ளே இருந்து அதிகாரிகள் வந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here