சீன வெளிவிவகார அமைச்சர் – விஜித ஹேரத் சந்திப்பு!

0
5

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பினரும் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கு இணக்கம் வெளியிட்டனர்.

அத்துடன், முக்கியமான கட்டுமான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும், அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதன்போது, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய திட்டங்கள் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என வாங் யி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here