சென் என்ரோஸ் பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக இன்று அப்பகுதியில் பாரிய நில வெடிப்பு ஏட்பட்டு இரண்டு வீடுகள் பாதிப்படைந்து உள்ளது..
எனவே இது தொடர்பாக தோட்ட முகாமையாளரோடு கலந்துரையாடி அக்குடும்பங்கள் தட்காலிகமாக வசிப்பதட்கு நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதோடு அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை சபையின் கௌரவ தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்கள் பெற்று கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ரொசிட்டா வீடமைப்பு திட்டத்தில் வடிகால் நிரம்பி வீடுகளுக்கு தண்ணீர் நிறைந்து மக்கள் பாதிப்படைந்து உள்ளதால் இன்று வடிகால் வெட்டி சுத்தம் செய்யப்படுகிறது.சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.