சீரற்ற காலநிலையிலும் மஸ்கெலியாவில் திருடர்களின் கைவரிசை!!

0
165

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் வெள்ளநீரில் பாதிக்கபட்ட மஸ்கெலியா கவரவில தோட்ட மக்களுடைய கால்நடைகள் ஐந்தை களவாடிய ஒன்பது பேரை மஸ்கெலியா பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

நேற்றையதினம் (21-05-2018) திங்கட்கிழமை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இருப்பிடத்தை விட்டு கவரவில பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுடைய கால்நடைகளான மூன்று பசுக்களும் இரண்டு கன்றுகுட்டிகளும் களவாடப்பட்டு கொண்டு சென்ற போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி சாமிமலை மல்லயிப்பு பிரதேசத்தில் வைத்து பொலிஸாரல் மடக்கி பிடிக்கபட்டது.

இதன்போது குறித்த கால்நடைகள் திருடப்பட்டு கொண்டு செல்லப்படுவது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் முச்சக்கர வண்டிகள் மூன்றும் கைபற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 09 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டிக்கோயா கம்பளை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த கால்நடைகளை கொண்டு செல்வதற்கான எவ்வித அனுமதிபத்திரங்களும் சந்தேக நபர்களின் வசம் இருக்கவில்லையெனவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட 09 சந்தேக நபர்களை இன்று(22.05.2018) செவ்வாய் கிழமை ஹற்றன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here