எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரம் கட்சியின் அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜெயந்த , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மத்திய மாகாண சபை உறுப்பினர் மதியுகராஜா, தேசிய அமைப்பாளர் ராஜதுரை ஆகியோர் கலந்துக்கொண்டனர்