சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் நிதி உதவியும், விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும்!!

0
162

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விவசாயிகளுக்கான நிதி உதவியும், விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் 30.09.2018 அன்று அட்டனில் இடம்பெற்றது.மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், விவசாய, கால்நடை, கமநல அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் அட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.இராஜதுரை, ஜெகதீஸ்வரன், விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள், எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 150 பயனாகளிகளுக்கு இதன்போது காசோலை மற்றும் கை டெக்டர், புல்லு வெட்டும் இயந்திரம், சூரிய சக்தியினால் இயங்கும் வேலி என பல உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here