சூடானின் டார்பர் மாகாணத்தின் விமான நிலையத்தில், இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கொலம்பிய நாட்டு கூலிப்படையினர், 40 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆபிரிக்க நாடான சூடானில், 2021இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிகார மோதலால், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை இராணுவப் படை, இராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியலா விமான நிலையத்தின் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் , கொலம்பிய நாட்டைச் சேர்ந்த, 40 கூலிப் படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணை இராணுவப் படைக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பியுள்ள ஆயுதங்களுடன் வந்த படகும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.