அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் சூரிய குளியல் செய்யும் போது ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படுவது எளிது என ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி தெரிவித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னியின் மூத்த ஆலோசகரான ஜாவத் லரிஜானி கூறுகையில் , “புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் வீட்டில் அவர் சூரிய குளியல் செய்ய முடியாது. ஏனெனில், அவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்துவது மிக எளிது,” என்று கூறினார்.
இந்தக் கருத்து உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து ட்ரம்ப் தெரிவிக்கையில் , “இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன், எனக்கு அதில் ஆர்வமில்லை,” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.